சூதாடிய 6 பேர் கைது
திருப்பூர், ஜூலை 15: திருப்பூர், வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராம் நகரில் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (44), லட்சுமி நகரை சேர்ந்த புவனேஸ்வரன் (38), கார்த்திகேயன் (47) ஆகியோர் என்பதும், அவர்கள் அங்கு பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.1240 பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதே போல் மருதமலை ஆண்டவர் நகரில் பணம் வைத்து சூதாடிய ஷாஜகான் (34), சுரேஷ் (58), லோகநாதன் (58) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம், சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.