வெறிநாய் கடித்து 5 ஆடுகள் சாவு
நரசிங்கபுரம், மே 15:ஆத்தூர் அருகே தலைவாசல் மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணி (60), கூலித்தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு வீட்டினருகே 5 ஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றார். நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது, நாய்கள் கடித்து குதறிய நிலையில் ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து ஆடுகளை குழிதோண்டி புதைத்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘வெறி நாய்கள் அப்பகுதியில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவில் ஆடு, கோழிகளை நாய்கள் கடித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் இறந்துள்ளன. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.