சேவல் சண்டை நடத்திய 4 பேர் தலைமறைவு
Advertisement
ஈரோடு, ஜூன் 5: ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி புங்கம்பள்ளி ஏரி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில், புளியம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, போலீசாரை கண்டதும் சேவல் சண்டை நடத்திய 4 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்தில் இறந்துபோன சேவல் ஒன்று மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தப்பி ஓடியவர்கள் புரடையன் என்ற ராஜசேகரன், கிடுகன் என்ற வீராசாமி, சவுந்தர், ஓம் பிரகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
Advertisement