சூதாடிய 4 பேர் கைது டூவீலர்கள் பறிமுதல்
தர்மபுரி, ஜூலை 2: பாலக்கோடு எஸ்ஐ முனிராஜ் மற்றும் போலீசார், கடமடை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, கடமடை ரயில்வே கேட் பகுதியில், பணம் வைத்து ஒரு கும்பல் சூதாடி கொண்டிருந்தது. இதனையடுத்து, அதே பகுதியை சேர்ந்த முனியப்பன், சுரேஷ், தாமோதரன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ₹4,500 மற்றும் 4 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement