சட்ட விரோத மது விற்பனை; 4 பேர் கைது
ஈரோடு, ஜூன் 19: சிறுவலூர் அடுத்துள்ள காமராஜ் நகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட கோபி, ஓலப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்தனர். இதேபோல, பர்கூர் தட்டக்கரை வனத்துறை அலுவலகம் அருகே மது விற்ற ஊகியம் புதுவீதியை சேர்ந்த காசி (36), கோபி, புதுமுகை முருகன் (48), சத்தி, கேஎன் பாளையம் பெரியசாமி (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement