36 கிலோ புகையிலை பறிமுதல்
கோவை, அக். 22: கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தி புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில், சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் சிவானந்தபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர்.
Advertisement
அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலை விற்ற சிவானந்தபுரம் 3வது தெருவை சேர்ந்த பழனிசாமி (58) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 36 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement