பூட்டை உடைத்து ₹30ஆயிரம் திருட்டு
சேலம், செப்.28: சேலம் அருகேயுள்ள பனமரத்துப்பட்டி குரால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்வரன் (28). இவர் சீலநாயக்கன்பட்டி நாமக்கல் ரோட்டில் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது பேக்கரி கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்த ₹30ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement