தோகைமலை பகுதியில் மது விற்ற 3 பெண்கள் கைது
தோகைமலை: தோகைமலை பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 3 பெண்களை போ லீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தோகைமலை காவல்சரகம் கொசூர் ஊராட்சி கம்பளியாம்பட்டி பழனியப்பன் மனைவி ராசம்மாள் (60). இவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல் பேரூர் உடையாபட்டி மலைக்கொழுந்தன் மனைவி கன்னியம்மாள் (62) என்பவரும், சின்னரெட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார் மனைவி மலர்க்கொடி (41) என்பவரும் தனது பெட்டிக்கடையில் மதுபானங்களை விற்பனை செய்து வந்து உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் அந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது ராசம்மாள், கன்னியம்மாள், மலர்க்கொடி ஆகியோர் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடா;ந்து அவர்களிடம் இருந்த 60 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசா; அவர்களை கைது செய்தனர்.