திருக்குறுங்குடி அருகே பைக்குகள் மோதி 3 பேர் படுகாயம்
களக்காடு, ஜூன் 19: திருக்குறுங்குடி அருகே பைக்குகள் மோதியதில் 3 பேர் படுகாயமபைந்தனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (53). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் வள்ளியூர் சென்று விட்டு, திருக்குறுங்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ராஜபுதூர் அருகேயுள்ள பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வள்ளியூர், சமத்துவபுரத்தை சேர்ந்த மெய்யர்குமார் ஓட்டி வந்த பைக், ரவிக்குமார் சென்ற பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரவிக்குமார், மெய்யர்குமார், அவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த மகிழடி கீழுரை சேர்ந்த நடராஜன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.