தர்மபுரியில் இளம்பெண் உள்பட 3பேர் தற்கொலை
தர்மபுரி: நல்லம்பள்ளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (28). தர்மபுரி டோல்கேட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சசிகலா (25). பாலசுப்பிரமணியன் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற பாலசுப்பிரமணியன், நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. சசிகலா மாடிக்கு சென்று, ஜன்னல் வழியாக பார்த்த போது, பால சுப்பிரமணியன் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதியமான்கோட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement