கஞ்சா பதுக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
தர்மபுரி, ஏப்.10: தர்மபுரி எம்ஜிஆர் நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், அ்ங்கு நடத்திய சோதனையில் மகாலிங்கம் மகன் சக்தி(28) என்பவரின் வீட்டின் அருகே 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சக்தி மற்றும் உடந்தையாக இருந்த முனிரத்தினம், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 2 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement