டூவீலர் மீது டிராக்டர் மோதி 2 பெண்கள் படுகாயம்
குளத்தூர், ஜன. 1: குளத்தூர் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(34) இவரது மனைவி லட்சுமி(30). நேற்று முன்தினம் மாலை லட்சுமியும், அவரது உறவினர் சென்னம்மாளும் டூவீலரில் தூத்துக்குடியில் சென்று ஜவுளி எடுத்து விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். டூவீலரை சென்னம்மாள் ஓட்டினார்.
வெங்கடேஸ்வரபுரம் அருகே வரும்போது இதே ஊரைச் சேர்ந்த மாடசாமி மகன் ஐயப்பன் ஓட்டிவந்த டிராக்டர், சென்னம்மாள் ஓட்டி வந்த டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சென்னம்மாள், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியினர் அவர்களை மீட்டு தனியார் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து லட்சுமியின் கனவர் செல்வக்குமார் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்ஐ முத்துராஜா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.