காதல் தகராறு கொலையில் மேலும் 2 பேர் கைது
சாத்தூர், ஜூலை 11: சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரேஸ்வரன்(35). இவர் தம்பி சிங்கேஸ்வரன் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் உறவினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்த ராஜபாண்டி, விஜயபாண்டி, மகேஸ்வரன் மற்றும் இருவர் சேர்ந்து ஒத்தையால் கிராமத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சங்கர் என்ற சங்கரேஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர். இது தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜாபாண்டி, விஜயபாண்டி, மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை பகுதியில் பதுங்கி இருந்த ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த அபிமன்யு(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் சாத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கமல் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.