மன்னார்குடி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2பேர் கைது
மன்னார்குடி, ஜூலை 8: மன்னார்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த பரவாக்கோட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிரா க்டர்களை பறிமுதல் செய்தனர். பரவாக்கோட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி ஆற்று படுகை மணல் கடத்தி வந்த இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்து அவற்றை ஒட்டி வந்த தளிக்கோட்டையை சேர்ந்த ஆதி தீபன் (20), ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த பிரேம்குமார் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பரவாக்கோட்டை போலீசார் நீதிபதி உத்தர வின் பேரில் அவர்களை கிளைச் சிறையில் அடைத்தனர். சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை அதிரடியாக கைது செய்து, அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலீசாரை எஸ்பி கரூண் கரட் பாராட்டினார்.