திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
Advertisement
திருச்சி, பிப்.8:திருச்சியில் போதை மாத்திரை விற்ற வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு கடந்த 6ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், சங்கிலியாண்டபுரம் குடோன் அருகே கூரியர் ஆபீஸ் பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம், பெரியார் நகரை சேர்ந்த பாண்டி(29), புதுக்கோட்டை மாவட்டம், கலைவாணர் தெருவை சேர்ந்த சந்தோஷ்(26) ஆகிய இருவரும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள், ஊசிகள், சிரிஞ்ச் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Advertisement