கரூர் மாவட்டத்தில் நாளை குரூப்-4 போட்டி தேர்வினை 18,030 பேர் எழுதுகின்றனர்
கரூர், ஜூலை 11: கரூர் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை 65 மையங்களில் 18,030 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வெழுத உள்ளதாகவும், தேர்வர்களுக்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்வரும் 12.7.2025 அன்று முற்பகல் மட்டும் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV தேர்வில், கரூர் மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில் 18,030 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்காணும் தேர்வர்கள், தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், வெளிச்சம் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.