தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

387 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தகவல் கையேடுகள் வழங்க 1500 தன்னார்வலர்கள் நியமனம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல்

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வரும் 15ம் தேதி முதல் 387 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 387 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதல் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் தினமும் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த நகர்புறப் பகுதிகளில் 80 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 307 முகாம்களும் நடைபெறும். நகர்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அதோடு, முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத்தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இப்பணி தொடர்ச்சியாக 3 மாதங்கள் நடைபெறும். அதற்காக, 1500 தன்னார்வலர்கள் பணயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.