15 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்
பாப்பாரப்பட்டி, ஜூலை 4: பாப்பாரப்பட்டி வாரச்சந்தை கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, நேற்று பேரூராட்சி அலுவலர்கள், வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பயன்பாட்டுக்கு வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், கப்புகள் என 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் கடை வைத்திருந்த வியாபாரிகளை சந்தை வளாகத்தினுள், கடைகள் அமைத்து விற்பனை செய்யும்படி அறிவுறுத்தினர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு, அனைத்து கடைக்காரர்களுக்கும், சந்தை வளாகத்தினுள் இடத்தை ஒதுக்கி கொடுத்தனர்.