ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
Advertisement
சிங்கம்புணரி, ஜூலை 6: சிங்கம்புணரி நாடார் பேட்டையில் வசிப்பவர் சரவணன். இவர், அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிர்மலாதேவி, அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சரவணன், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை மற்றும் 13 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பீரோவில் வைத்திருந்த நகைகள் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement