குட்கா விற்ற 12 பேர் கைது
ஈரோடு, ஜூலை 14: ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், குட்கா பொருட்கள் விற்ற நம்பியூர் அடுத்த சூரியம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் (65), சண்முகம் (50), விஜயமங்கலம் அடுத்த புதுப்பாளைத்தைச் சேர்ந்த பூபதி (63), பவானி காமராஜர் நகரைச் சேர்ந்த நிர்மல்குமார் (39) உள்ளிட்ட 12 பேரையும் கைது செய்த போலீசார், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.