1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்
கோவை, ஜூன் 18: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையில்லை உள்ளிட்ட போதைபொருட்களை ஒளிப்பதற்காக கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் நேற்று அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் 2 பேர் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தனர். இவர்களை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொது அவர்களிடம் 1.5 கிராம் மெத்தோபெட்டமைன் உயர்ரக போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் செல்வபுரம் பகுதியை சேர்ந்த பிரோஸ் கான் (30), சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த காஜா உசேன் (25) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement