சிவகாசியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
Advertisement
விருதுநகர், மே 25: சிவகாசி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ சோமசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சிவகாசி சன்னாசிபட்டி ஓம் சக்தி தெருவில் கோயில் முன்பாக நின்றிருந்த வேனை சோதனையிட்டனர்.
அதில் 50 கிலோ எடையிலான 25 மூட்டைகளில் 1,250 கிலோ ரேசன் அரிசி இருந்ததும், கடத்தலில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தை சேர்ந்த சதீஸ் (36), தூத்துக்குடி மாவட்டம் சவளப்பேரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (26) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விருதுநகர் ஜேஎம்1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement