திமுக இளைஞர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்
நீடாமங்கலம், ஜூலை 9: தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை ஆருகில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பேரூர் செயலாளர் இராஜசேகரன் தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர்ஆனந்த்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனங்குடி குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர் ஆடுதுறை, உத்திராபதி இளம் பேச்சாளர் தினேஷ்பாபு ஆகியோர் உரையாற்றினார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம செந்தமிழ்ச் செல்வன், பேரூராட்சி தலைவர் ராமராஜ், பொதுக்குழு உறுப்பினர் கமாலுதீன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ராணி சேகர் உள்ளிட்ட இளைஞரணி, பிற அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டர்.முன்னதாக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் காந்தி மணி வரவேற்புரையாற்றினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்சிவதாஸ் நன்றி கூறினார்.