ரஷ்யா: நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து க்ளூச் செவ்ஸ்காய் எரிமலை வெடித்து சிதறியுள்ளது
12:06 PM Aug 01, 2025 IST
மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று புதன்கிழமை காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரு அதிர்ச்சிகளில் இருந்து மக்கள் மீள்வதற்குள் ரஷ்யாவில் மிகப் பெரிய எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.