கோதுமை பிளம் கேக்
கோதுமை மாவு - 2 கப்,
நாட்டுச் சர்க்கரை - 1 கப்,
உருக்கிய வெண்ணெய் - ¾ கப்,
பேக்கிங் பவுடர் - ½ டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்.
பால் - ½ கப்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்,
பேரீச்சம் பழம் - ¼ கப்,
வால்நட்ஸ், முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி - சேர்த்து ½ கப்.
செய்முறை:
கோதுமை மாவு, பேக்கிங்பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை, தேன் எல்லாம் சேர்த்து கிரீமாக பீட் செய்து, தயிர், எசன்ஸ் சேர்த்து பீட் செய்யவும். சர்க்கரையை கேரமல் செய்து அதில் ஃப்ரூட் கலந்து தயார் செய்யவும். பின் மாவுக்கலவையில் கேரமல் ஃப்ருட் கலவை சேர்த்து நன்கு கலந்து விடவும். அதில் கேரமல் ஃப்ரூட் கலவையை கலந்து பீட் செய்யவும். பின் கேக் கலவையை மோல்டில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் கோதுமை ‘பிளம் கேக்’ தயார். சத்தானது மிருதுவானது.