மத்வரின் இளைய சகோதரர்!

``மகத்துவம் மிக்க மத்வ மஹான்கள்’’ பகுதியில், முதலில் துவைத தத்துவத்தை ஸ்தாபித்த ஸ்ரீமத் மத்வாச்சாரியார் அவர்களில் இருந்து தொடக்கி, ஸ்ரீ பத்மநாபதீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவதீர்த்தர், ஸ்ரீ அக்ஷோப்யதீர்த்தர், ஸ்ரீ ஜெயதீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் ஆகிய மகான்களை வரிசைப்படி தரிசித்து வந்தோம்....

விஜயாலய சோழீஸ்வரம் கோயில்

By Porselvi
25 Jul 2025

விஜயாலய சோழீஸ்வரம் கோயில் தமிழ்நாட்டின் கட்டடக்கலை வரலாற்றில் அதன் தனித்துவமான அம்சங்களுடன் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. சோழர் பாணியிலான கோயில் கட்டுமானத்தின் ஆரம்பகால எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.அடிவாரத்தில் சிறு குளத்தைக் கடந்து, உயர்ந்து செல்லும் மேலமலை குன்றின் மீது சுமார் 1 கி.மீ. ஏறிச்சென்று இவ்வாலயத்தை அடையலாம். பாதி தூரம் ஏறிச் சென்றவுடன் முதலில் பிள்ளையார் கோவிலும்...

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில்

By Nithya
24 Jul 2025

சூட்சும ரூபத்தில் உள்ள இறையாற்றலை உணர்வதற்கும் நாம் நல் வழி பெறுவதற்கும் உள்ள தலமே கோயிலாகும். இந்த கோயில்களில் யாரெல்லாம் எந்த தருணத்தில் போனால் நமக்கான நற்பலன்களை அடையலாம் என்பதை ஜோதிடம் நமக்கு அறிவுறுத்துகிறது. அதன்வழி நாம் பின்பற்றினால் நமக்கான குறைகளை சரி செய்து கொள்ளவும். பிரச்னைகளை தீர்ப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் அறியலாம். இதுவே...

அம்மை நோய் நீக்கும் அம்மன்

By Nithya
23 Jul 2025

வேதங்களில் காணப்படும் தத்துவங்களை எளிய கதைகளாக தொகுத்து வழிகாட்டுவதே புராணங்கள். அத்தகைய புராணங்களில் ஒன்றுதான் மாரியம்மன் எனும் ரேணுகாதேவி அம்மன் வரலாறு. ஜவ்வாது மலைச்சாரலில் கமண்டல நதி ஓரம் தனது தவ வாழ்க்கையை ஜமதக்னி முனிவர் மேற்கொண்டிருந்தார். இவரது மனைவிதான் ஆதிசக்தியின் அம்சமான ரேணுகாதேவி. இவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் திருமாலின் அவதாரமான பரசுராமரும்...

ஆடியில் அம்மனின் தரிசனம்!

By Nithya
22 Jul 2025

தாயமங்கலம் - முத்துமாரி முத்துச்செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங்களும் இருந்தன. மதுரை மீனாட்சியிடம் குழந்தை செல்வம் வேண்டினார் செட்டியார். ஒரு முறை மதுரையிலிருந்து சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியை கடக்கும் போது மூன்று வயது சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. குழந்தையை...

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

By Lavanya
18 Jul 2025

ராமேஸ்வரம் பகுதி 7 திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய கடற்கரைத் திருத்தலங்களைத் தொடர்ந்து கடல் நடுவே தீவாக அமைந்துள்ள இராமேஸ்வரம் பற்றி இங்கு காண்போம். இங்குள்ள உலகப் பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி கோயிலில் இறைவன் பர்வதவர்த்தினி எனப்படும் மலைவளர்காதலியுடன் வீற்றிருக்கிறார். வங்கக் கடலில் சுமார் 13,000 ஏக்கர் நில அளவில் அமைந்துள்ள அழகிய சிறு...

அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோவில்!

By Lavanya
17 Jul 2025

ராஜகோபுர தரிசனம்! பத்தாம் நூற்றாண்டு வரிசையில் திருச்சி மாவட்டத்திலுள்ள அன்பில் எனும் ஊரில் அமைந்திருக்கும் சத்தியவாகீஸ்வரர் கோவில் பண்டைய சோழர் காலத்திலேயே (கிமு 9 முதல் கிபி 11ம் நூற்றாண்டு வரை) உருவானதாகக் கூறப்படுகிறது. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907 - 955) காலத்தில் இந்தக் கோவில் பெரிதும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று...

அழகன் குடி கொண்ட ஆறுபடை வீடுகள்

By Lavanya
16 Jul 2025

  சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம் , கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.பழந்தமிழ் நூலான...

காரிய சித்திக்கு காலஅனுமன்

By Nithya
09 Jul 2025

இந்த வாரம் ``வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ பகுதியில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் என்னும் இடத்தில் ``அனந்தகிரி கால அனுமன்’’ கோயில் உள்ளது. இந்த கோயிலை அப்பகுதி மக்கள் சுருக்கமாக கால அனுமன் கோயில் என்றே அழைக்கிறார்கள். இந்த கோயிலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ... வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹைதராபாத்...

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

By Porselvi
07 Jul 2025

பகுதி 6 கடற்கரையில் அமைந்துள்ள திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய திருப்புகழ்த் திருத்தலங்களைத் தொடர்ந்து நாம் காணவிருப்பது, கடலை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு திருப்புகழ்த் தலமாகிய திருப்பாதிரிப்புலியூர். பாடலீஸ்வரர் பிரஹன்நாயகியுடன் குடிகொண்டுள்ள திருத்தலம். இது கடைஞாழல் எனப்பட்ட கடலூரின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இறைவி, பாதிரி [Trumpet Flower] மரத்தடியில் சிவனைப் பூஜித்த காரணத்தாலும்,...