சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை கழகம், தேசிய தொழில்நுட்ப கழகம் போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் பட்டியலினத்தவர்கள், பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையில் வெளியேறியிருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. பட்டியலின மாணவர்களுக்கு எதிராக ஒன்றிய கல்வி நிறுவனங்களில் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதால் இத்தகைய இடை நிறுத்தலும், தற்கொலைகளும் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரதமர் மோடி வாய்மூடி மவுனியாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் சொல்லத் தயாராக இல்லை. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார். வினை விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.