ஆனித் திருமஞ்சனமும் ஆடல்வல்லானின் அற்புத தரிசனமும்

ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்...

அப்பம் விரும்பும் ஆனைமுகன்

சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....

ஆலய வழிபாடுகளில் தெய்வீக இசை

இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...

நிச்சயம் செய்ய வேண்டும் நீத்தார் கடன்

வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் ``நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும்,...

நமஸ்கார இறை வழிபாடு

கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். பஞ்சாங்க நமஸ்காரம் - அஷ்டாங்க நமஸ்காரம் - உத்தம நமஸ்காரம் என மூன்று வகையான நமஸ்கார வழிபாடுகள் உள்ளன. கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிராகாரத்தை வலம் வருவார்கள்....

ஆனை முகனுக்கு ஏன் அறுகம்புல் வழிபாடு?

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர்கள், நிவேதனங்கள் விசேஷம். பெருமாளுக்கு துளசி. சிவபெருமானுக்கு வில்வம். பராசக்திக்கு வேப்பிலை. விநாயகருக்கு அறுகம்புல். உலகம் வாழ தகுதியானதாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அங்கே அறுகம்புல் என்ற தாவரம் வளர வேண்டும். உயிரினத்தின் அடிப்படை அறுகம்புல். புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப்...

வலம்புரிச் சங்கின் தெய்வீக மகிமையும் வழிபாட்டு முறைகளும்

  வலம்புரிச் சங்கு என்பது இந்து சமயத்தில் மிகுந்த தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக கருதப்படும் புனிதப் பொருளாகும். சங்கு களில் ஆண் சங்கு, பெண் சங்கு என இரு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில், ஆண் சங்கிலேயே “ஓம்” எனும் பரமநாதம் ஒலிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. வலம்புரிச் சங்கினால் இறைவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்வது பாவங்களை...

வாழ்க்கையை மாற்றும் விரதமும் வழிபாடும்

ஞாயிறு நவகிரகங்களில் முதன்மையானவராக வணங்கப்படும் சூரிய பகவானுக்கு, ஞாயிற்றுக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவது எதிரிகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பையும் அமைதியையும் தரும். மேலும், வாழ்வில் ஒளி செலுத்தும் சக்தியாக அவர் அருள் செயல்படும். இதன் மூலம் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமாக மாறும். திங்கள் திங்கட்கிழமையில் விரதம் இருந்து...

குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு

ஒரு மனிதனின் குடும்பப் பாரம்பரியம் எனக் கொண்டால் அவன் மூன்று வகை தெய்வங்களை வணங்க நேரிடும் அவை 1. குல தெய்வம் 2. இஷ்ட தெய்வம் 3. பிரீதி தெய்வம். இவற்றில் குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். குல தெய்வம் பரம்பரை பரம்பரையாக ஒரு வழி பங்காளிகளாக கூடி வழிபாடு செய்யும் தெய்வம்...

கல்வி, தனம், ஞானம் சிறந்து விளங்கச் செய்யும் புதன் வழிபாடு

நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். கல்வி தரும் புதன் புதன் பகவானுக்கு சவும்யன் என்ற பெயர் உண்டு. புதனை வழிபட்டால் அகங்காரம்...