புராணத்தில் அக்னி நட்சத்திரம்

நம் வாழ்வில் சந்திக்கும் சில நிகழ்வுகளில்கூட ஏதாவது ஒரு புராணமோ அல்லது இதிகாசமோ தன் பங்கை அளித்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. பின் வரும் நிகழ்வே அதற்குச் சான்று. பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் இதிகாச கால யமுனையில், மகிழ்ச்சியாக நீராடிவிட்டு வந்து கொண்டிருந்தனர், அர்ஜுனனும் கிருஷ்ணனும். அவர்கள் வழியில் திடீரென வந்து நின்றார் முதிய அந்தணர் ஒருவர்,...

என் கடன் சிவப்பணி செய்து கிடப்பதே...

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை-11-5-2026 திருமுனைப்பாடி நாடு பெண்ணையாறு பாய்வதால் வளம் பெற்றது. திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பிறந்த பெருமை பெற்ற நாடு திருமுனைப்பாடி. திருவாமூர் இந்நாட்டில் இருக்கும் ஒரு ஊர். வேளாளர் குடியில் பிறந்த புகழனார் என்பவரின் மனைவி மாதினியார். இவர்களின் மூத்த மகள் திலகவதியார். சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் மருள்நீக்கியார். மருள்நீக்கியார் கல்வி...

உலகத்தை அளந்த உலகளந்த பெருமாளின் அருகில் அனுமன்!

பகுதி 1 மகான் ஸ்ரீ வியாசராஜர், சில அனுமன்களை பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் உள்ளே பிரதிஷ்டை செய்திருக்கிறார். அப்படி பிரதிஷ்டை செய்ய அனுமன்களில் மிக முக்கிய அனுமன், திருக்கோவிலூரில் திரிவிக்ரமஸ்வாமி கோயிலில் அருள்பாலித்து வருகிறார். திருக்கோவிலூர் பற்றியும், திரிவிக்ரமரை பற்றியும், திரிவிக்ரமஸ்வாமி கோயிலின் சிறப்புகளை பற்றியும், இங்கே உள்ள வீர ஆஞ்சநேயரை பற்றியும், இன்னும் பல...

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

இன்றைய சிறப்பும் சிற்பமும் வரிசையில் பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள் கண்டேன். ஆந்திர பிரதேசம் ஒண்டிமிட்டா கோரண்ட ராமசுவாமி கோயில், பாண்டேயூ ஆலயம், வெங்கடரமணர், இடம் பெற்ற அனைத்து சிற்பங்களும் காணக் கிடைக்காத காட்சி. இவற்றை பார்த்தபோது ஆலயத்தை சுற்றிப் பார்த்த நிறைவு ஏற்பட்டது. ‘இன்றைய முத்துக்கள் முப்பது’ வரிசையில் ஸ்ரீ ராம நவமியும், பங்குனி...

தாயுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

தேனி பஸ் நிலையத்துக்கு அருகில் மதுரையிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இருக்கும் தேனீ பெத்தாட்சி விநாயகர் கோயிலில் காணப்படும் ஒரு விசேஷமான சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள ஆஞ்சநேயர் அவரது தாயாரான அஞ்சனா தேவியுடன் காட்சியளிப்பதுதான். குழந்தையைக் கொடுத்து வாங்கும் கோயில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலுள்ள பொள்ளாப்பிள்ளையார் சந்நதியில் நடைபெறும் ஒரு விசேஷமான அதிசயமிது! குழந்தைப்பேறு இல்லாதவர்கள்...

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 4.5.2026 திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) துவங்குகிறது. அக்னி நட்சத்திரம் என்பது ஆண்டுதோறும் சித்திரை மாத இறுதியில் (ஏப்ரல் - மே) சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் தொடங்கி கார்த்திகை நட்சத்திரம் முழுவதும் வலம் வரும் மிக வெப்பமான காலமாகும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்....

தடைகளைத் தகர்க்கும் கால பைரவர்

பைரவர் என்றால் பயங்கரமானவர் அல்லது அச்சுறுத்து பவர் என்று பொருள். கால பைரவர், சிவபெருமானின் உக்கிர ரூபமான அவதாரம் ஆவார். உண்மையான நம்பிக்கையுடன் அவரிடம் சரணடை பவர் மிக விரைவாக மகிழ்ச்சி அடைகிறார். அவருடைய சக்திவாய்ந்த மந்திரங்களைத் தவறாமல் உச்சரிப்பது கால பைரவரின் அளவற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும். சிவன் மற்றும் சக்தி தேவியின் ஒவ்வொரு...

அருளால் ஆட்கொள்ளும் கள்ளழகர்!

கள்ளழகர் வைகையாற்றில் எமுந்தருளல் - 1.5.2026 தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான...

நன்மைகளை வாரி வழங்குவார் நரசிம்மர்

நரசிம்ம ஜெயந்தி - 30.4.2026 *அவதாரங்கள் ஏன்? பகவான் எண்ணற்ற அவதாரங்களை எடுக்கின்றான் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும், குறிப்பாக 10 அவதாரங்களை மட்டும் நாம் சிறப்பாகப் பேசுகின்றோம். ஆயினும் அவருடைய அவதாரங்கள் அதிகம். வேதம் பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது. சாதுக்களை காப்பதற்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும்...

திருஈங்கோய் மலை மரகதாசலேஸ்வரர்

பிருகுமுனிவர் சிவபெருமானை வணங்கும் வழக்கம் உடையவர். அம்பாள் வழிபாட்டை என்றுமே செய்யாதவர். அன்னையின் முக்கியத்துவம் பக்தர்களுக்கும் தெரிய வேண்டும் என சிந்தித்தார். தனது திருவிளையாடலை தொடங்கினார். அம்பாளை கோபப்படும்படி செய்தார். அம்பாள் பூலோகத்தில் வந்து தவம் செய்தாள். அந்த தவத்தின் வலிமை காரணமாக சிவபெருமான் தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக உறுதி அளித்தார். ஆதிசேஷனுக்கும் -...