மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 22ம் தேதி ஓவியப்போட்டி

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3ம் தேதி) சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22ம் தேதி (சனிக்கிழமை) சி.எஸ்.ஐ. காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளி, சாந்தோமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. மாற்றுத்திறன் வகையின் அடிப்படையில் 4...

பணம் கொடுத்து பீகாரில் வெற்றி மே.வங்கத்தில் பாஜவின் சூழ்ச்சி பலிக்காது: பிரதமர் மோடிக்கு திரிணாமுல் எம்பி பதில்

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  பீகார் வெற்றி விழாவில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த இலக்கு மேற்குவங்கத்தில் காட்டாட்சியை அகற்றுவது தான் என்றார். இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சகாரிகா கோஷ், “பிரதமர் மோடி மேற்குவங்கத்தை கைப்பற்ற விரும்புகிறார். அதைப்பற்றி பேசுகிறார்....

இந்திரா, ராஜீவ் காந்தியுடன் பணியாற்றிய காங். தலைவர்கள் ராகுலால் சோர்வடைந்து விட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தெடியபாடா: இந்திரா, ராஜீவ்காந்தியுடன் பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தியால் சோர்வடைந்து விட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று சென்றார். அங்கு, பழங்குடியினர் சமூகத்தின் தெய்வமான பண்டோரி மாதா கோயிலில் வழிபாடு செய்த அவர், பழங்குடியின தலைவர் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை...

கர்நாடகாவில் 2 நாளில் 28 மான்கள் மரணம்

பெலகாவி: கர்நாடாகாவின் பெலகாவியில் கிட்டூர் ராணி சென்னம்மா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இரண்டு நாட்களில் 28 அரிய வகை மான்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார். வனத்துறை உதவி பாதுகாவலர் நாகராஜ் பால்ஹாசூரி கூறுகையில் பாக்டீரியா தொற்று காரணமாக மான்கள் இறந்திருக்க கூடும் என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையான...

ஆந்திராவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு

கொல்கத்தா: சர்வதேச இதழான ஹெர்படோசாவாவில், ஆந்திர மாநிலத்தில் புதிய ஸ்லென்டர் கெக்கோ இனத்தை சேர்ந்த பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் ஐதராபாத்தில் உள்ள நன்னீர் உயிரியல் பிராந்திய மையம், கொல்கத்தாவில் உள்ள ரெப்டிலியா பிரிவு மற்றும் ஒடிசாவின் பக்கீர் மோகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் குழுக்களின் கூட்டு முயற்சியாகும். புதிதாக...

சீன எல்லைக்கு மிக அருகில் லடாக்கில் 13,700 அடி உயரத்தில் புதிய விமானப்படை தளம்

லடாக்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தற்போது பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 23 கிமீ தூரத்தில் உள்ள லடாக்கில் இந்தியா ஒரு புதிய உயரமான விமானப்படை தளத்தை அமைத்துள்ளது. சுமார் 13,700 அடி உயரத்தில் கட்டப்பட்ட முத்-நியோமா விமானப்படை நிலையத்தில் 2.73 கிமீ...

புகார் அளித்ததால் ஆத்திரம் ரூ.100 கோடி காணிக்கை திருட்டு வழக்கில் திருப்பதி விஜிலென்ஸ் அதிகாரி கொலை: 12 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

திருமலை: திருப்பதியில் ரூ.100 கோடி காணிக்கை திருட்டில் புகார் அளித்த விஜிலென்ஸ் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பராக்காமணியில் எழுத்தராக பணிபுரிந்து வந்த சி.வி.ரவிக்குமார் என்பவர், கடந்த...

ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் இருந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நீட்...

டெல்லி கார் குண்டுவெடிப்பு விவகாரம் மேற்கு வங்க மருத்துவ மாணவர் கைது: மேலும் 3 டாக்டர்களை பிடித்து விசாரணை

கொல்கத்தா: டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேற்கு வங்க மருத்துவ மாணவர் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. இதுதவிர, அல் பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மேலும் 3 டாக்டர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 13 பேர்...

சபரிமலை தங்கம் திருட்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கத்தகடுகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க தங்கம் திருட்டு தொடர்பான ஆவணங்களை தரக்கோரி பத்தனம்திட்டா மாவட்டம் ராநி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்தது....