ஆராரோ
ஆரிராரோ…
2006ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘விக்ரமார்குடு’ என்ற படத்தின் ரீமேக்தான் ‘சிறுத்தை’ படம். ‘பாகுபலி’ பட புகழ் ராஜமௌலி இயக்கிய படம். ரவிதேஜா, அனுஷ்கா ஆகியோர் நடித்த அந்த படத்திற்கு, தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக ஆஸ்கார் வாங்கிய எம்.எம். கீரவாணிதான் இசையமைத்திருந்தார். அந்த படம் தெலுங்கில் ஹிட் அடித்ததை அடுத்து, தமிழில் ‘சிறுத்தை’, இந்தியில் ‘ரௌடி ரத்தோர்’, கன்னடத்தில் ‘வீர மடகரி’ என பல மொழிகளில் ரீமேக்கானது. இந்தப் படத்தின் பாடல்கள் உட்பட அனைத்தும் ஹிட். குறிப்பாக தமிழில் கார்த்தியின் மகளாக வரும் பேபி ரக்ஷனாவின் கியூட்னஸ் மற்றும் அவர் வரும் காட்சிகளில் ஒலிக்கும் ‘ஆராரோ ஆரிராரோ’ பாடல் என அனைத்தும் இன்றும் எவர்கிரீன். அந்த பேபி ரக்ஷனாதான் டீனேஜ் கண்மணியாக சமீபத்தில் அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அவ்வளவு வருஷமா ஆச்சு என படம் வெளியாகி 12 வருடங்கள் ஆனதையும் சேர்த்து இணையவாசிகள் ரக்ஷனாவின் தற்போதையப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.
சில்லுன்னு
ஷ்ரேயா ஷர்மா
எப்படி கார்த்தியின் மகளாக ‘சிறுத்தை’ படத்தில் நடித்த பேபி ரக்ஷனா டீனேஜ் வயதை அடைந்திருக்கிறாரோ அதே போல் அவர் அண்ணன் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் நடித்த பேபி ஷ்ரியா ஷர்மாவுக்கும் தற்போது வயது 27. சமீபத்தில் அவரது புகைப்படங்களும் வைரல் ஹிட்டாகியுள்ளது. சில படங்கள் காலம் தாண்டி ஹிட்டடித்து இத்தனை வருடங்கள் கடந்துவிட்டதா என நம்பவே நமக்கு நாட்களாகும்படி அமைந்துவிடுகின்றன. அதிலும் இப்படத்தின் ‘முன்பே வா அன்பே’ பாடல் செய்த மாயம் பலருக்கும் இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்டன என்பதே தெரியாத அளவுக்கு இன்றும் பிளேலிஸ்ட்டில் உள்ளன. ரஹ்மான் மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும். இணையத்தில் ஷ்ரியாவும் இப்போதும் டிரெண்ட்.