சென்னை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 18-வது ஆளுநராகவும் ஒன்றிய நிதித்துறை செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் வெங்கிடரமணன். வெங்கிடரமணனின் மகளும், முன்னாள் தலைமை செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.