மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும் என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு போதுமானதாக இருக்காது
நாங்கள் யாரையும் கடத்திக் கொண்டு சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. எங்களை நாடி வந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்கள் கடமையை செய்தோம். சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உற்ற பாதுகாப்பு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும். சாதிவெறி அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். காதலை பெற்றோரே ஏற்றுக் கொண்டாலும் சில சாதி அமைப்புகள்தான் இதை ஊதிப் பெரிதாக்குகின்றன.
சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு கேடயமாக மார்க்சிஸ்ட் இருக்கும் என்று கூறினார்.