ஓமலூர்: பெங்களூருவில் இருந்து சுமார் 10 டன் தக்காளியை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று சேலம் மார்க்கெட்டிற்கு வந்தது. ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் வந்தபோது, லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால், நிலை தடுமாறிய லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த தக்காளி சாலையில் கொட்டியது. தகவலறிந்து வந்த ஓமலூர் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
லாரியை அப்புறப்படுத்தி, சேதமடைந்த தக்காளிகளை சாலை ஓரமாக தள்ளி விட்டனர். நல்ல நிலையில் இருந்த தக்காளியை மீட்டு மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் தக்காளி பழங்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். தற்போது விலை குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் தக்காளியை எடுக்காமல், வேடிக்கை மட்டும் பார்த்து சென்றனர்.