சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. நள்ளிரவில் ஆலையின் மீது மின்னல் தாக்கியதில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையின் நுழைவாயில் அருகே இருந்த அறை இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.