டெல்லி : நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.