டொராண்டோ: கனடா ஓபன் சர்வதேச டென்னில் தொடர் டொராண்டோ மற்றும் மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த பைனலில், 4ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் 29 வயதான ஜெசிகா பெகுலா, 14ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் 24 வயது லியுட்மிலா சாம்சோனோவாவுடன் மோதினார். இதில், 6-1,6-0 என்ற செட் கணக்கில், ஜெசிகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவரது 3வது சர்வதேச பட்டம் இதுவாகும். ஆடவர் ஒற்றையர் பைனலில், இத்தாலியின் 21 வயது ஜானிக் சின்னர், 6-4,6-1 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.