திருவள்ளூர்: திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று 18ம் தேதி திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.