Friday, May 24, 2024
Home » பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ஜோகோவிச்; கோகோ காப் முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ஜோகோவிச்; கோகோ காப் முன்னேற்றம்

by kannappan

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். நான்காவது சுற்றுல் இத்தாலியின் 19 வயது இளம் வீரர் லொரன்சோ முசெட்டியுடன் (76வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (34 வயது), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 6-7 (7-9) என தோற்று பின்தங்கினார். கடும் போராட்டமாக அமைந்த 2வது செட்டையும் 6-7 (2-7) என டை பிரேக்கரில் இழந்த ஜோகோவிச் நெருக்கடியில் சிக்கினார். எனினும், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி முசெட்டியை திணறடித்த அவர் 6-1, 6-0 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுக்க 2-2 செட் என சமநிலை ஏற்பட்டது. காயம் காரணமாக தடுமாறிய முசெட்டி 5வது மற்றும் கடைசி செட்டில் 0-4 என பின்தங்கிய நிலையில், போட்டியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, ஜோகோவிச் கால் இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 27 நிமிடத்துக்கு நடந்தது. மற்றொரு 4வது சுற்றில் அர்ஜென்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (10வது ரேங்க்) 7-6 (11-9), 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீரர் லெனார்டு ஸ்டிரப்பை (42 வது ரேங்க்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்ரையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் (17 வயது, 24வது ரேங்க்) 6-3, 6-1 என்ற நேர் செட்களில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியரை வீழ்த்தி, முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 53 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தனது 4வது சுற்றில் 2-6, 0-6 என நேர் செட்களில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவிடம் தோற்று வெளியேறினார்.* பெடரர் விலகல்சாதனை வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 4வது சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், முழங்கால் மூட்டு காயத்துக்கு 2 முறை அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளதால் தொடர்ந்து விளையாடி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால், அவருடன் மோதவிருந்த இத்தாலி வீரர் பெரட்டினி கால் இறுதிக்கு முன்னேறினார்.* செரீனா ஏமாற்றம்அமெரிக்க நட்சத்திரம் செரீனா (7வது ரேங்க்) நேற்று முன்தினம் இரவு நடந்த 4வது சுற்றில் 3-6, 5-7 என நேர் செட்களில் எலனா ரைபாகினாவிடம் (கஜகஸ்தான்) தோல்வியைத் தழுவினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – பிராங்கோ ஸ்குகோர் (குரோஷியா) ஜோடி 5-7, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் அந்துஜார் – மார்டினஸ் இணையிடம் தோற்று வெளியேறியது….

You may also like

Leave a Comment

13 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi