Saturday, May 11, 2024
Home » இசையமைப்பாளர் இமான் மனைவியை பிரிந்தார்

இசையமைப்பாளர் இமான் மனைவியை பிரிந்தார்

by kannappan

சென்னை: இசையமைப்பாளர் இமான், திருமணமான 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மனைவி மோனிக்கா ரிச்சர்டிடமிருந்து பிரிந்ததாக சமூக ஊடகங்களில் அறிவித்தார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் மோனிக்காவை ஏப்ரல் 2008ல் திருமணம் செய்து கொண்டார் இமான். இந்த ஜோடி கடந்த மாதம் விவாகரத்து செய்துவிட்டனர், மேலும் பிரிவினை பற்றி இமான் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக வாழ்க்கை நம்மை வெவ்வேறு பாதைகளில் அழைத்துச் செல்லும் போது, மோனிக்கா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என முடிவு செய்துவிட்டோம். எங்கள் நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் முன்னேறவும், முன்னேற உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி’ என்று கூறியுள்ளார்….

You may also like

Leave a Comment

fifteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi