போக்ஸ்வேகன் நிறுவனம், புதிய ஜிடி எட்ஜ் டிரெய்ல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சுடன் வருகிறது.
உட்புறம் சிவப்பு ஸ்டிச்சிங் உடன் கூடிய கருப்பு சீட்கள், சீட்களின் பின்புறம் டிரெயில் முத்திரை, சிவப்பு ஆம்பியன்ட் லைட்டுகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக் சன்ரூப் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.16.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் வாகன டெலிவரி துவங்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.