புனே: புனேவில் நடைபெற்ற பழமையான கார் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்ற வின்டேஜ் கார் கண்காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியை ஒட்டி 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு கார் பேரணி நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பயன்படுத்திய கார் மற்றும் பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பயன்படுத்திய ரோல்ஸ் ராயல்ஸ் , மாசிடிஸ் பென்ஸ், செவெரல்ட்ரக கார்கள் உள்ளிட்ட 125 பழமையான கார்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. போர் சமயங்களிலும் வெளிநாடுகளிலும் பயன்படுத்திய மிக பழமையான கார்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டன. பழமையான கார்கள் முன்பு நின்று பறவையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.