விழுப்புரம்: விழுப்புரம் விஷச் சாராய வழக்கில் மேலும் இருவரை போலீஸ் கைது செய்தது. புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை, பர்கத்துல்லாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழுமலையின் ஆலையில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட ரசாயன பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்தது. மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர்.