சென்னை :விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில்,”தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. வரவேற்கிறேன்.அவருக்கான வாக்காளர்கள் அவருக்கு. எனக்கான வாக்காளர்கள் எனக்கு. விஜய் கடினமாக உழைக்க வேண்டும்.மண்ணை ஆள்வதற்கு முன்னால் தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.