உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. “மதரஸா வாரியத்தின் நோக்கங்கள் ஒழுங்குமுறையுடன் கூடியது; மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது. அங்கு பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.