புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலங்களவை எம்பியாக இருந்த ஹர்த்வார் துபே ஜூன் 26ம் தேதி உயிரிழந்தார். இவரது பதவி காலம் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஹர்த்வார் மறைவை தொடர்ந்து மாநிலங்களவை எம்பி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாநிலங்களவை எம்பி பதவிக்கு அடுத்த மாதம் 15ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.