பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் நேற்று முன்தினம் பாட்னா சென்றனர். லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது பூர்விக கிராமமான புல்வாரியாவிற்கு தனது மனைவி ராப்ரி தேவியுடன் சென்று பார்வையிட்டார். மார்ச்சியா சவுக்கில் உள்ள தனது தாயாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தாவேவில் உள்ள துர்கை கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.