நாகர்கோவில்: குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி ஓரின சேர்க்கை வீடியோ வெளியாகி கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குமரி மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிமுக நிர்வாகி ஒருவர், கட்சியினர் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இந்நிலையில் அந்த நிர்வாகி, வாலிபர் ஒருவருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன. சுமார் ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ, அவருடன் ஓரின சேர்க்கை மேற்கொள்ளும் வாலிபர் மூலமே ரகசியமாக கேமராவை வைத்து படமாக்கப்பட்டு உள்ளது.
அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தம் 4 பகுதிகள் உள்ளதாகவும், தற்போது ஒரே ஒரு பகுதி மட்டும் வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என பிரச்னைகள் வெடித்து கட்சியினர் மிகுந்த சோர்வாக உள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ அதிமுக தலைமையின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.