ஸ்கோடா இந்தியா நிறுவனம் புதிய ஸ்லாவியா ஸ்டைல் எடிஷன் என்ற லிமிடெட் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ₹19.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். கேண்டி ஒயிட், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் டொராடோ ரெட் என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கும். ஸ்டைல் எடிஷன் என்ற பெயருக்கு ஏற்ப, அனைவரையும் கவரும் வகையில் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. டூயல் டேஷ் கேமரா, ஸ்கப் பிளேட்டுகள், முன்புற சீட்கள், பி -பில்லர்களில் லோகோவை வெளிப்படுத்தும் படில் லாம்ப்கள், ஸ்டீரிங் வீல் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூரை கருப்பு நிறத்தில் இடம் பெற்றிருக்கும். லிமிடெட் எடிஷன் என்பதால், 500 ஸ்டைல் எடிஷன் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.