Sunday, October 6, 2024
Home » 20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

by Karthik Yash

சென்னை: 20,332 அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மூன்றே ஆண்டுகளில் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி. 20,332 அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, 519.73 கோடி ரூபாயில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது. பயணத்தைத் தொடர்வோம், தமிழ்நாட்டை உயர்த்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi